வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். – பிந்திய செய்தி

பிந்திய செய்தி

வவுனியாவில் மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்த நபர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டடித்தின் மேல் பகுதியில் விளம்பர பாதாதை அமைக்கும் பணிக்காக ஐந்து பேரடங்கிய குழுவினர் வவுனியாவுக்கு வருகை தந்து குறித்த கட்டடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அதன் போதே இறந்த நபர் மாடியிலிருந்து விழுந்துள்ளார் என பொலிஸாரின் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

இறந்த நபர் மாடியிலிருந்து பாய்ந்து வீழ்ந்துள்ளது கட்டடத்தின் காண்காணிப்பு வீடியோ காட்சிகள் மூலம் வெளியாகியுள்ளது. அவர் மாடியிலிருந்து விழும் போது இருவர் அவரை தடுப்பதற்கு ஓடி செல்வது அந்த பதிவில் காணப்படுகிறது.

ஏன் வீழ்ந்தார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவரோடு வேலைக்காக வருகை தந்த மற்றைய நபர்கள் பொலிஸாரினால் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவ அறிக்கை வெளியான பின்னரே இறப்புக்கான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

————————-

வவுனியா, நகர பகுதி பஷார் வீதியிலுள்ள மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் மரணமாகியுள்ளார். நேற்று இரவு தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அவர் இறந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

36 வயதான சந்தீப் மலிக் எனும் இறந்த நபர், மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி(லொட்ஜ்) ஒன்றில் தங்கியிருந்து நகை வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள நிலையில் இது கொலையா, தற்கொலையா, அல்லது தவறி வீழ்ந்து இறந்துள்ளாரா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். - பிந்திய செய்தி
வவுனியாவில் தலை சிதறி இந்தியர் மரணம். - பிந்திய செய்தி

Social Share

Leave a Reply