கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் 50 நாட்களை இன்று பூர்த்தி செய்துள்ள நிலையில், பாரிய போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உலக வர்த்தக மையத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த வீதி தடையை தகர்க்க முயன்ற வேளையில் அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சில வீதிகளுக்குள் உள் நுழையவும், உடமைகளுக்கும், வீடுகளுக்கும் சேதம் விளைவிக்க கூடாதென நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருந்தது.
இன்றைய போராட்டம் பிற்பகல் வேளையில் ஆரம்பித்து இரவு வரை நடைபெற்றது.
