ஸ்ரீலங்கன் விமான நிலையங்கள் கேரளா, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய, மெல்பேர்னுக்கு சென்ற விமான நிலையமும், ஜேர்மனி பிராங்போர்டுக்கு சென்ற விமானமும் கடந்த தினங்களில் இவ்வாறு திருவானந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி சென்றுள்ளன.
சென்னை விமான நிலையம் செல்வதிலும் பார்க்க, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புதல் தூரம் குறைவாக இருப்பதனால் அவ்வாறு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கல் நிலைமைகள் தீரும் வரை தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும் திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இலங்கை வரும் விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடைமுறை பின்பற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் சிக்கல் நிலைகள் காரணமாக இலங்கைக்கான பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
