IMF ஊடக 3 பில்லியன் டொலர் அவரச கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அவசர தேவைகளுக்கான 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வழங்குனர்களிடமிருந்து பெறுவதற்கான திட்ட அனுமதியினை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாத ஆரம்ப பகுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும், இந்த மாத இறுதிப் பகுதிக்குள் அதிகாரிகள் மட்டத்திலாலான ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல முடியுமென இலங்கை சார்பில் நம்பிக்கை காணப்படுவதாகவும் சர்வதேச செய்தி முகவர் நிலையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கடன் சர்வதேச நாணய நித்தியத்தினூடாக வழங்கப்படுமாக இருந்தால், இலங்கைக்கான கோட்டாவை விட நான்கு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமையுமென்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இலங்கை பொருளாதார மேம்படுத்தல் தொடர்பிலான நிலையான கொள்கைகளை வகுக்க வேண்டும். அரசியல் மாற்றங்களினூடாக அரசியல் ஸ்திரத்தன்மையினை உருவாக்க வேண்டும் ஆகிய முக்கிய விடயங்களை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பிலான முயற்சிகள் மாத்திரமே இலங்கையில் நடைபெற்று வருகிறன. அவை இன்னமும் முடிவை எட்டவில்லை.

இந்த விடயங்கள் சரியான ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே இலங்கைக்கான வெளிநாட்டு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் கிடைக்கும் வாய்ப்புகளுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் பேசப்பட்ட விடயங்களையோ அல்லது பேசப்படவுள்ள விடயங்களையோ இரண்டு தரப்புகளும் உறுதி செய்யவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF ஊடக 3 பில்லியன் டொலர் அவரச கோரிக்கை

Social Share

Leave a Reply