பங்களாதேஷில் இன்று இடம்பெற்ற தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டகூங்கில் உள்ள கொள்கலன் களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக, உள்ளே வைக்கப்பட்டிருந்த இரசாயன பொருட்கள் வெடித்தமையினால் சேதங்கள் அதிகரித்துள்ளன.
பல நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பலில் கொண்டு செல்வதற்காக வைத்திருந்த கொள்கலன்கள் பல எரிந்த்துள்ளன.
சம்பவத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் மோசமான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென கவலை வெளியிடப்பட்டுள்ளது.
