முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று மாலை கொழும்பு கோட்டை நீதிபதி திலின கமகே வீட்டில் சரணடைந்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதற்கு தேடுவதனை நிறுத்துமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் கோட்டை நீதிபதி அவரை கைது செய்யுமாறு நேற்று பிடிவிராந்து பிறப்பித்திருந்தார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனுவினை இன்று விசாரித்த முறையீட்டு நீதிமன்றம் இன்று இரவு 8 மணிக்குள் சரணடைய வேண்டுமெனவும் அதுவரை பிடிவிராந்தை பாவிக்க வேண்டாமெனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மஹரகமவில் உள்ள நீதிபதியின் வீட்டில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.