மின்சார சட்ட மூல திருத்தம் நிறைவேற்றம்

மின்சார சட்ட மூல திருத்தம், இன்று பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்காக விடப்பட்ட நிலையில் அது வெற்றி பெற்றுள்ளது. வலுசக்தி மற்றும் மின்சத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மின்சார திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

எதிர்க்கட்சியினர் இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பை வாக்களிப்புக்கு விடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி நடைபெற்ற வாக்களிப்பில் 120 இற்கு 36 என்ற அடிப்படையில் இந்த சட்ட மூலம் 84 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் 25 மெகா வோட் மின்சாரத்துக்கு மேலதிகமாக வழங்க கூடிய எவரும் மின் விநியோகத்தினை வழங்க முடியும் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விண்ணம் கையளித்து, பின்னர் விலை மனு கோரலின் அடிப்படையில் விநியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையில் காலூன்றி மின் விநியோகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுக்குமென கூறி இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் பணி பகிஷ்கரிப்பை அறிவித்து பின்னர் கைவிட்டிருந்தனர். இந்த சட்ட திருத்தம் தனியார் துறையினர் மின் விநியோகத்தின் கட்டணங்களை தங்கள் விருப்பத்துக்கு மாற்ற முடியுமெனவும், அதனால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவும் குறித்த சங்கம் தெரிவித்திருந்தது.

மின்சார சட்ட மூல திருத்தம் நிறைவேற்றம்

Social Share

Leave a Reply