இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்

இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுப்பு அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு முக்கியானதாக கருதப்படுகிறது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இரண்டாவது அமைச்சாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களது பொறுப்புகள், வேலைத்திட்டங்கள் மற்றும் திணைக்களங்கள் போன்றன வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுகளுக்கு ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஸ்ரீலங்கா டெலிகாம், தொலை தொடர்பு ஆணைக்குழு, தகவல் தொழில் நுட்பம் உட்பட முக்கிய நிறுவனங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கு மகளிர் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சகல நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு பிரபல வர்த்தகரும், இலங்கையின் முதல் நிலை பணக்காரனுமான தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதற்காகவே பசில் ராஜபக்ஷ தனது தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தார் எனவும் கூறப்படுகிறது. எப்படியாயினும் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் இந்த அமைச்சுகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply