தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 48 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சு மூலமாக தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முடிந்தது.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் ஹென்றிச் க்ளாஸான் 29 ஓட்டங்களையும், ரீஷா ஹென்றிக்ஸ் 23 ஓட்டங்களையும், வெய்ன் பார்னல் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், ஹர்சால் பட்டேல் 4 விக்கெட்களையும், யுஸ்வேந்த்ரா ஷஹால்3 விக்கெட்களையும், அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முன்னதாக துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
ருத்ராஜ் கெய்க்வூட் 57 ஓட்டங்களையும், இஷன் கிஷன் 54 ஓட்டங்களையும் பெற்றனர். ஹார்டிக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றார்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டுவைன் பிரட்டோரியஸ் 2 விக்கெட்களையும், ககிஸோ றபாடா, கேஷவ் மஹாராஜ், ரப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் 5 போட்டிகளடங்கிய தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-1 என்ற ரீதியில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது.
நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.
—————
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது 20-20 போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதும், மத்திய தர வரிசை துடுப்பாட்ட வீரர்கள் போதியளவு சிறப்பாக துடுப்பாடவில்லை.
ருத்ராஜ் கெய்க்வூட் 57 ஓட்டங்களையும், இஷன் கிஷன் 54 ஓட்டங்களையும் பெற்றனர். ஹார்டிக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களை பெற்றார்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டுவைன் பிரட்டோரியஸ் 2 விக்கெட்களையும், ககிஸோ றபாடா, கேஷவ் மஹாராஜ், ரப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடித்த தென்னாபிரிக்கா அணி இந்தப் போட்டியிலும் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்தி பிடிக்கும் வாய்ப்புகளுள்ளதாக நம்பப்படுகிறது.
————————-
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான தொடரில் 2-0 என தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் காணப்படுவதனால் தொடரை வெற்றி பெற இந்தப் போட்டி இலங்கைக்கு முக்கியமானதாக அமைகிறது.
இரு அணிகளும் மாற்றங்களின்றி கடந்த போட்டியில் விளையாடிய அணிகளோடு களமிறங்குகின்றன.
அணி விபரம்
இந்தியா
1 இஷன் கிஷன், 2 ருத்துராஜ் கெய்க்வாட், 3 தீபக் ஹூடா / ஷ்ரேயாஸ் ஐயர், 4 ரிஷாப் பான்ட், 5 ஹார்டிக் பாண்டியா, 6 தினேஷ் கார்த்திக், 7 அக்சர் பட்டேல், 8 ஹர்சல் படேல், 9 அவேஷ் கான், 10 புவனேஷ்வர் குமார், 11 யுஸ்வேந்த்ரா ஷஹால்
தென்னாபிரிக்கா
1 ரீசா ஹென்ட்ரிக்ஸ், 2 டெம்பா பவுமா (கேப்டன்), 3 ராஸ்ஸி வான் டெர் டுசென், 4 டேவிட் மில்லர், 5 ஹென்ரிச் கிளாசென் (வாரம்), 6 டுவைன் பிரிட்டோரியஸ், 7 வெய்ன் பார்னெல், 8 ககிசோ ரபாடா, 9 லுங்கி அன்ரிஜ் என்கிடி, நோர்ட்ஜே ங்கிடி,/கேஸ்ஹவ் 10 , 11 தப்ரைஸ் ஷம்சி
