லிற்றோ சமையல் எரிவாயு கப்பலிலிருந்து இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருகை தந்த கப்பலுக்கு இன்று பணம் செலுத்தப்பட்ட நிலையிலேயே இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
நாளை மறுதினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்குமென லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் மக்களுக்கு முழுமையாக இந்த எரிவாயு கிடைப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இறக்கப்படும் சமையல் எரிவாயு வைத்தியசாலைகள், தகன சாலைகள், விடுதிகள்(ஹோட்டல்கள்) போன்றனவற்றுக்கு விநியோகப்பதிலேயே முன்னுரிமை வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
