நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீதியில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வெடி பொருட்கள் அந்த பொதியில் இருக்கலாமென்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தேவாயலம் அமைந்துள்ள வீதி முற்றாக மூடப்பட்டு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் விமானப்படையினர் குறித்த சந்தேகத்துக்கிடமான பொதி தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்துக்கிடமான பொதி கைப்பற்றப்பட்ட பகுதியிலேயே நீர்கொழும்பு மாநகர முதல்வரின் வீடு அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது பகிரப்படும்.

