இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன. பாரளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எதிர்க் கட்சிகள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக தெரிவித்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளன.
பாராளுமன்ற அமர்க்கவுகள் ஆரம்பிக்க முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு சென்று தாம் நேரத்தை வீணடிக்க தேவையில்லை எனவும், வரும் காலங்களில் நாட்டின் கஷ்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கூறும் எச்சரிக்கைகளை கேட்டுக்கொண்டிருக்க மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச “தாம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும், தாம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிப்பதாகவும், பாரளுமன்றத்துக்கு வருகை தருவதனால் எந்த பலன்கள் இல்லை எனவும், மக்களோடு வீதிகளில் அமரப்போவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கைளையும் எடுக்கவில்லை எனவும் அதனை செயற்படுத்த காலம் வழங்குவதாகவும் அது வரையிலும் தாம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயக்கே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார்கள்.