ஆட்சியிலுள்ள அரசாங்கம் முட்டாள்தனமான, அலங்கோலமான, கேவலமான, ஐயோக்கிய, ஏமாற்றுக்கார அரசாங்கம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று தனது பாராளுமன்ற உரையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
ஜனாதிபதி அதிகாரிகளை அழைத்து ஒரு கூட்டத்தை வைக்கிறார். அதே குழுவை அழைத்து பிரதமர் கூட்டம் வைக்கிறார். கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்களும் இல்லை. என்ன கோலமிது? அலங்கோலம் என மனோ கணேசன் கூறினார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்ற நகர்வுகளை புறக்கணித்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேற முதலில் உரையாற்றிய மனோ கணேசன் இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.
கொழும்பிலுள்ள மக்கள் எரிபொருளின்றி கஷ்டப்படுகிறார்கள். இறக்கிறார்கள். வட கொழும்பு, மத்திய கொழும்பு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தோட்ட தொழிலார்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த நாட்டுக்காக ஏற்றுமதி மூலம் வருமானத்தை ஈட்டி தந்த அவர்கள் இன்று உணவுக்கு கஷ்டபப்டுகிறார்கள்.
தோட்ட தொழிலாளர்களுக்கு உணவில்லை. தோட்ட தொழிலார்களுக்கு நிலங்களை வழங்கி அவர்களது உண்வு தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள் என கடந்த 31 ஆம் திகதி பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்திருந்தோம். அது தொடர்பில கூட்டத்துக்கும் அழைக்கப்பட்டது. காணிகளை வழங்குவதாக தெரிவித்தார்கள். இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கூறியதெல்லாம் பொய். இனி எந்தவித பிரதமரின் கூட்டங்களுக்கும் செல்ல மாட்டோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொய் சொல்லுகிறார். ஏமாற்றுகிறார் என மனோ கணேசன் பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
