இந்தியா விசேட குழு இலங்கைக்கு அதிவேக விஜயம்

இந்தியா உயர் மட்டக் குழுவொன்று நாளை(22.06) இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகை தரவுள்ள குழு மூன்று மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பிவிடுமென கூறப்படுகிறது.

இந்தியா அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்தா நாகேஸ்வரன் தலைமையிலான குழு விசேட விமானம் மூலமாக வருகை தரவுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராக்கொட அண்மையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரின் சந்திப்பை தொடர்ந்து இந்த விசேட குழுவின் வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகை தரவுள்ள குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வருகை தரும் சிறப்பு குழு மூன்று மணி நேரத்தில் மீண்டும் திரும்பிவிடுமென கூறப்படுகிறது.

இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி திட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை வரவுள்ள குழு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயுமென நம்பப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தின் பின்னர். இந்திய சிறப்புக் குழுவொன்று இவ்வாறு அதிரடி விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியா விசேட குழு இலங்கைக்கு அதிவேக விஜயம்

Social Share

Leave a Reply