குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிலையத்தில் வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியினை கடுமையாக இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிலையத்திற்கு வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த இராணுவ அதிகரையினை நோக்கி வருகை தந்த பொலிஸ் அதிகாரி, அவருடன் பேசுவதும், பின்னர் அது வாக்குவாதமாக மாறிய நிலையில் பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்துசண்டை போட்டிகளில் தாக்குவது போல இராணுவ அதிகாரி தாக்குதல் நடத்துகின்றார். சிலர் இராணுவ அதிகாரியினை தடுத்து இழுத்து செல்லும் போது கோபமடைந்த பொலிஸ் அதிகாரி, அந்த இராணுவ அதிரயினை சுடுவதற்கு தனது துப்பாக்கியினை எடுக்க முயற்சிக்க இன்னுமொரு பொலிஸ் அதிகாரியும், அந்த இடத்தில நின்றவர்களையும் பொலிஸ் அதிரையினை கட்டுப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பம், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காணப்பட்ட கண்காணிப்பு கமரா மூலமாக பதிவாகியுள்ளது.
எரிபொருள் வரிசைகள் மக்கள் மத்தியில் இறப்புகளை ஏறபடுத்தியும், மோதல்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இவற்றை தடுப்பதற்கு பாதுகாப்புக்காக உள்ளவர்களிடையேயும் மோதல்களை உருவாக்கியுள்ளது.