தம்மிக்க பெரேரா அமைச்சரானார்

கடந்த புதன்கிழமை, பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து, பாரளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா இன்று(24.06) மாலை ஜனாதிபதி முன்னிலையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சத்திய பிராமணம் செய்து பதவியினை பொறுபேற்றுக் கொண்டார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டு வர்த்தமானி மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், தம்மிக்க பெரேரா அந்த அமைச்சின் முதலாவது அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடிக்கு, இலங்கையின் முதலாவது பணக்காரன் என வர்ணிக்கப்படும் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றால், முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர முடியுமெனவும், அவரால் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் நம்பப்படுகிறது.

தம்மிக்க பெரேராவின் பாராளுமன்ற நுழைவுக்கு எதிர்ப்புகள் காட்டப்பட்டமையும் சுட்டிக் காட்டத்தக்கது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரே அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தம்மிக்க பெரேரா அமைச்சரானார்

Social Share

Leave a Reply