அமெரிக்க ஜனாதிபதி – இலங்கை தூதுவர் சந்திப்பு.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் மஹிந்த சமரசிங்க ஜோ பைடனுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு நடைபெற்றுள்ள நேரத்தில் அமெரிக்க முக்கிய தூதுக்குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அமெரிக்காவின் திறைசேரியின் ஆசியாவுக்கான உதவி உப செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி உப செயலாளரும், தூதுவருமான கெல்லி கெய்டெர்லிங் ஆகியோர் உள்ளிடட குழுவினர் நாளைய தினம் இலங்கை வருகை தரவுள்ளனர்.

இந்த குழு 26 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. அத்தோடு அரசியல் ரீதியாக பலதரப்பானவர்களையும் சந்திக்கவுள்ளது. சர்வதேச அமைப்புகளையும், பொருளாதர நிபுணர்கள், பொருளாதர அமைப்புகளையும் இந்த குழு சந்திக்கவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி - இலங்கை தூதுவர் சந்திப்பு.

Social Share

Leave a Reply