இன்று(26.06) அதிகாலை 2 மணி முதல் எரிபொருள் விலையேற்றப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்கள் இரண்டுமே விலையதிகரிப்பு செய்துள்ளன.
92 ரக பெற்றோல் 50 ரூபாவினாலும், 95 ரக பெற்றோல் 100 ரூபாவினாலும், அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ரக பெற்றோல் 470 ரூபவாகவும், 95 ரக பெற்றோல் 550 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டீசல் 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுப்பர் டீசல் 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டீசலின் தற்போதைய விலை 460 ரூபா. சுப்பர் டீசலின் விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றத்தின் பின்னர் எரிபொருட்கள் சாதாரணமாக விநியோகத்துக்கு வருமென்ற மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா அல்லது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல எரிபொருள் வருகைக்காக காத்திருக்க வேண்டுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
