ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிபந்தனையினாலேயே எரிபொருள் விலையேற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் எப்போது கிடைக்குமென தெரியாது எனவும், எரிபொருள் இறக்குமதி தொடர்பாக அமைச்சின் நான்கு குழுக்கள் வேலை செய்வதாகவும் வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ரஸ்சியாவிடமிருந்து பெற்றோல் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டு அமைச்சர்கள் ரஸ்சியா பயணிக்கவுள்ளளதாகவும் காஞ்சன விஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 9000 மெற்றிக் தொன் டீசல் மற்றும், இரண்டு வகை பெற்றோலும் சேர்த்து 5,500 மெற்றிக் தொன் கையிலிருப்பதாகவும் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை லங்கா ஐ.ஓ.சி இடமிருந்து 10,000 மெற்றிக் தொன் டீசலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், சூத்திரத்துக்கு அமைவாக எரிபொருளை விலையேற்றியினாலே டீசல் வழங்க முடியுமென அந்த நிறுவனம் நிபந்தனை விதித்தமையினாலேயே விலை அதிகரிப்பு செய்யப்பட்டது எனவும், நாட்டில் எரிபொருள் இல்லாத காரணத்தினாலேயே இந்த முடிவுக்கு சென்றதாகவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர கூறியுளளார்.

இறுதியாக செய்யப்பட்டுள்ள விலையேற்றத்தின் காரணமாக மண்ணெண்ணெய் தவிர்ந்த மற்றைய எரிபொருள்கள் இலாபத்துக்கு சென்றுள்ளதாகவும் சூத்திரத்தின் மூலம் அது தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் மண்ணெண்ணையினால் மிக பெரியளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்தின் நிபந்தனையினாலேயே எரிபொருள் விலையேற்றம்!

Social Share

Leave a Reply