காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும், அவ்வர்களது கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும், இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வண்ணமுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது வரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள பேராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று (26.06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றிருந்தார்.
போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ஸவாதம், மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிப்பதாக தெரிவித்ததோடு, ராஜபக்ஸக்களின் பங்கேற்புள்ள எந்தவொரு அரசாங்கத்திலும் தாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
