நேற்று கொழும்பு, கஹத்துட்டுவ பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் கணவன், மனைவி இருவரும் இறந்தனர். அவர்களுடைய 19 வயது மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 வயதான மகள் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது அறையினுள் சேமித்த வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனிலிருத்து பெற்றோல் கசிந்து பரவிய நிலையில், தீப்பொறி மூலமாக தீ ஏற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் முழுமையான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் இதுதான் சரியான காரணம் என உறுதிப்படுத்த முடியாது என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ, எரிபொருளை சேமித்து வைக்க வேண்டாமெனவும், அதன் மூலம் உயிர் ஆபத்துக்கள், பொருட் சேதம் என்பனவும், அயலவர்ளுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
