நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்குக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
கையிருப்பில் உள்ள பணத்தினை வைத்து எரிபொருள் இறக்குமதியினை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி பணித்தனை தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் விநியோக நிறுவனங்களுக்கான நிலுவைகளை செலுத்தி திட்ட நடைமுறை ஒன்றுக்கு செல்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
நேற்று (27.06) ஜனாதிபதி மாளிகையில், நீண்ட நாட்களாக எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவன பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதனை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும், மத்திய வங்கிகளினூடாக பணத்தினை வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம செய்யும் தாய் நிறுவனங்கள் வழமையாக நடைமுறையிலிருந்த கடன் உத்தரவாத கடிதத்துக்கு எரிபொருள் வழங்காவிட்டால், அந்த நிறுவனங்களோடு பேசி, தற்காலிக ஏற்பாடுகள் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறுவதாகவும், தற்காலிக திட்டம் ஒன்றினூடாக எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி பணிப்பாளர்களது நேரடி தலையீடு எரிபொருள் வழங்கும் தாய் நிறுவனகளோடு இருந்தால் மட்டுமே எரிபொருள் இறக்குமதி சாத்தியமென எரிபொருள் இறக்குமதி முகாமையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
