உலகத்தில் மிக மோசமாக பணவீக்கம் உள்ள நாடுகளது பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில தரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதலாவது ஆராய்ச்சிக்கான பலக்லைக்கழகமான ஜோன் ஹொப்பிங்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஸ்டீவ் H ஹேங் செய்த ஆய்வுகளின் படி, கடந்த 23 ஆம் திகதி வரையான முடிவுகளின் படி இலங்கை இரணடாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் சிம்பாவே நாடு காணப்படுகிறது.
கறுப்பு சந்தையில் டொலர் பரிமாற்றம் 128 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளது. இதுவே சிம்பாவேயில் 377 சதவீதமாக காணப்படுகிறது. இதே டொலர் பரிமாற்றத்தில் அரசாங்க தகவல்களின் அடிப்படையில் 39.10 சதவீதமாக காண்பபடுவதாக ஆய்வில் புள்ளியிடப்பட்டுள்ளது.
முந்தைய வாரத்துக்கான ஆய்வில் மூன்றாவது இடத்தில காணப்பட்ட இலங்கை இரண்டாமிடத்துக்கு சென்றுள்ளது.
ஆய்வுக்கும் இலங்கையில் நடைபெறும் மாற்றங்கள் மற்றும் விலையேற்றங்களை ஒப்பிடுகையில் சமந்தார நிலைமை காணப்படுவதாக பொருளாதர நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வில் முக்கிய நாடுகளில் ஆர்ஜன்டீனா 10 ஆம் இடத்தில் காணப்படும் அதேவேளை, பாகிஸ்தான் 12 ஆம் இடத்தில் காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில் இந்த வீழ்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றே நம்பப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கடன்கள் கிடைத்தால் மட்டுமே இந்த மீட்சி மறுபக்கமாக திரும்பும்.
