கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நேரடியாக தலையிட்டு சமைத்த உணவுகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக சமையலறை திட்டம் தொடர்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் மனோ கணேசன் சர்வதேச நாடுகளிடமும் தற்போது இந்த கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு வேளை சமைத்த உணவையினாவது மக்களுக்கு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பை சூழவுள்ள மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு மக்களே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் உள்ளவர்கள் கூட உணவுப் பொருட்களை வாங்குவதற்கு சிக்கல் நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
