இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதறக்காக, கொள்வனவு தொடர்பிலான பேச்சுவார்தைகளுக்காக அமைச்சர்கள் ரஸ்சியா மற்றும் கட்டாருக்கு பயணித்துள்ளனர்.
கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ரஸ்சியாவுக்கு சென்றுள்ளார். இன்று காலையில் வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் சுற்று சூழல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் காட்டருக்கு சென்றுள்ளனர்.
இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்த விநியோயகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை பெற முடியாத நிலையில் புதிய விநியோகிஸ்தர்களை பெறும் முயற்சிகளில் இலங்கை அரசு களமிறங்கியுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்றும் பயனில்லை எனவும், வெளிநாடுகளிலிருத்து எரிபொருளை பெறுவது சாத்தியமல்ல எனவும், தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்திருந்தால், அந்த டொலர்களாவது மிச்சமாக இருக்குமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதவேளை இங்கிலாந்து சென்ற அமைச்சர் ஒருவர் உயர் வசதிகளுடைய விடுதியில் தங்கியிருந்ததாகவும், நாட்டின் இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த செலவிலான விடுதி ஒன்றில் அல்லது தூதுவரின் இல்லத்தில் தங்கியிருக்கலாமெனவும் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
