லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் வழங்கும் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவும், முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாவும், கார் வகைகளுக்கு 7000 ரூபாவும் என்ற கணக்கின் அடிப்படையில் பெற்றோல் வழங்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்க அறிவித்தலின் படி வரிசை இலக்கத்தை பெற்று அந்த முறையின் அடிப்படையில் பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
