இந்தியாவின் எரிபொருள் துறை, இயற்கை வாயு, வீடமைப்பு, நகர அமைச்சர் ஸ்ரீ ஹர்டீப் சிங் பூரியை நேற்று(27.06) இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
இலங்கையின் எரிபொருள் விநியோகம் மற்றும் மக்கள் படும் கடுமையான இன்னல்கள் தொடர்பாகவும், இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான சவால்கள் குறித்தும் அமைச்சர் பூரியிடம் இலங்கைத் தூதுவர் விளக்கியுள்ளார்.
இந்தியா அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்த உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரஹொட, இலங்கையின் மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மேலும் அவசர உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு அமைச்சர் பூரி சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக மிலிந்த மொரஹொட தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவசர நிலையோடு நிறுத்திவிடாது எரிபொருள் மற்றும்சமையல் எரிவாயு விநியோகங்களை நீண்ட கால அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையிலும் செயற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மிலிந்த மொரஹொட மேலும் கூறியுள்ளார்.
