ஐக்கிய இளைஞர் சக்தியினால் மதிய உணவு வழங்கும் திட்டம் இன்று மதியம் கிரிலப்பனையில் ஆரம்பிக்கப்பட்டது. “சமூக சமையலறை திட்டம்” எனும் பெயரிடப்பட்டு இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது.
நாளைய தினமும் மதியம் கிரிலப்பனை சந்தைக்கு முன்பதாக இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் நடைபெறவுள்ளது.
ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் மயந்த திஸ்ஸநாயக்க, மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.
1000 பேருக்கான உணவுகள் இன்று வழங்கப்பட்டதாக ஐக்கிய இளைஞர் சக்தியின் உறுப்பினர் லக்ஷயன் முத்துக்குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இளைஞர் சக்தி உறுப்பினர்கள் மற்றும் கிரிலப்பனை சமூகத்தினர் உணவு தயாரிப்புகளில் பங்கெடுத்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
