முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்

இலங்கைக்கான ஐப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) முல்லைத்தீவு, விசுவமடுக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஐப்பானிய உதவியில் இயங்கிவரும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.

ஐப்பான் நாட்டின் நிதி உதவியில் 2 மில்லியன் ரூபா செலவிலான நவீன இயந்திரங்கள் தோங்காய் எண்ணை உற்பத்திற்ககாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்து தோங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதுடன் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த உற்பத்தி நிலையத்தினை ஐப்பானிய தூதுவர் வந்து பார்வையிட்டுள்ளதுடன் கட்டிடத்திற்கான நினைவுக்கல்லினையும் திரைநீக்கம் செய்துவைத்து இயந்திரங்களின் செயற்பாடுகள் தொழில்வாய்ப்புக்கள் உற்பத்தி திறன்கள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.கேரத் உள்ளிட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்க தவைர்கள் பணியாளர்கள் மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு சென்றார் ஐப்பானிய தூதுவர்

Social Share

Leave a Reply