இன்று(29.06) காலை 10 மணி முதல் 3 மணி வரை வாகனங்களை வீதியில் நிறுத்தும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
குரல் பதிவு ஒன்றின் மூலமாக சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் ஆரம்பிக்கும் நேரப்பகுதில் வீதியில் வாகனங்களை நிறுத்தி, போராட்டங்களில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பதவியிலிருந்து விலக கோரியே இந்த போராட்டம் நடாத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் நடைபெறும் இடங்களை தவிர்த்து கொள்ளுமாறு அமெரிக்க தூதரகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த போராட்டம் எங்கே நடைபெறும் என்ற விபரங்கள் இல்லை. எந்த இடங்களில் தாங்கள் பயணிக்கிறீர்களோ அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது. வாகனங்களை வீதிகளில் நிறுத்தி வாகன நெரிசலை ஏற்படுத்தி பொலிசாரை தடுமாற வைக்குமாறும் குறித்த போராட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
