இந்த மாதம் எரிபொருள் கப்பல்கள் 10 இலங்கைக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 8 ஆம் திகதிக்கும், 14 ஆம் திகதிக்கும் இடையில் இரண்டு டீசல் கப்பல்கள் வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரன்டு கப்பல்கள் 22 அல்லது 23 ஆம் திகதிகளில் டீசல் மற்றும் பெற்றோலுடன் வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 7500 மெற்றிக் தொன் டீசலுக்காக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு கடந்த 30 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜூலை 11 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்குமிடையில் வருகை தரவுள்ள ஓட்டோ டீசல் 40,000 மெற்றிக் தொன்னுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வருகை தரவுள்ள எரிபொருட்களுக்காக 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை, 49 மில்லியன் டொலர்கள் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரவுள்ள பெற்றோல் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர வழங்கியுள்ள விபரங்கள்
July 08-09: 40,000 மெற்றிக் தொன் டீசல் – இலங்கை பெற்றோலியம்.
July 11-14: 40,000 மெற்றிக் தொன் டீசல் – இலங்கை பெற்றோலியம்.
July 13-15: 30,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் – லங்கா ஐ.ஓ.சி
July 22-23: 40,000 மெற்றிக் தொன் டீசல் – அனுமதி எதிர்ப்பார்க்கப்படுகிறது.
July 22-23: 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் – இலங்கை பெற்றோலியம்.
July 29-31: 30,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் – லங்கா ஐ.ஓ.சி
August 13-15: 30,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் – லங்கா ஐ.ஓ.சி
இலங்கை அதிகாரிகள் மலேசிய நிறுவனம் ஒன்றிலிருத்து 50,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 10,000 மெற்றிக் தோன் மண்ணெண்ணெய் கொள்வனவுக்காக பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருவதாகவும் காஞ்சன கூறியுள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு ஜூலை 13-15, ஜூலை 29-31, ஓகஸ்ட் 10-15 ஆகிய திகதிகளில் மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகை தரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா உறுதி செய்துள்ளார் . ஒவ்வொரு கப்பலும் 30,000 மெற்றிக் தொன் கொள்ளளவுடன் சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய இடங்களில் இருந்து வருகை தரவுள்ளதாகவும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் அண்ணளவாக 12,774 மெற்றிக் தொன் டீசல், 1414 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல், 2647 மெற்றிக் தொன் 95 ரக பெற்றோல், 233 மெற்றிக் தொன் சுப்பர் டீசல், 500 மெற்றிக் தொன் விமான எரிபொருள், 29,000 மெற்றிக் தொன் பியூரன்ஸ் ஒயில் ஆகியன கையிருப்பில் இருப்பதாக வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர கூறியுள்ளார்.
