கிளிநொச்சியில் 6400 லீட்டர் டீசல் இன்று பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 35 பரல்களில் இந்த டீசல் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதியின்றி இந்த டீசல் மற்றும் 35 லீட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.
25 வயதான நபர் ஒருவர் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருப்பதாக கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாரால் இந்த எரிபொருள் தொகையினை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
