பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வரக்கூடிய டொலர்களை தடுத்து தனது அரசியல் விளையாட்டையே செய்கிறார் என முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் தம்மிக்க பெரேரா ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் எந்த திட்டங்களும் இல்லையென குற்றம் சுமத்திய தம்மிக்க பெரேரா, ரணில் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவரும் திட்டங்களை நிறுத்துகிறார். அவரிடம் டொலர் வரும் திட்டங்களை நிறுத்தும் பழக்கம் உண்டெனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லையெனவும், ஆனால் நிதித்தியமைச்சராக அவர் தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலோ, நாட்டின் பண பரிமாற்றங்கள் தொடர்பிலோ, எந்தவித திட்டங்களும் இல்லையெனவும், மக்களின் பிரச்சினைகளையே கூறிக்கொண்டு இருக்கிறார் என மேலும் தம்மிக்க கூறியுள்ளார்.
நாட்டின் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு, நடைபெறுகின்ற விடயங்களை பார்க்கின்ற வேளையில் தானும் போராட்டங்களில் களமிறங்கவுள்ளதாக மேலும் தம்மிகா பெரேரா கூறியுள்ளார்.
