கடைசி மங்குனி மன்னன் – வில்லுப்பாட்டு

நாட்டின் தற்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு, பெற்றோல் வாங்கின கதை உட்பட பல கதைகளை வில்லு பாட்டும், பாடலுமாக இசையமைப்பாளர், பாடகர், எழுத்தளாளர் பூவன் மதீசன் பாடலை எழுதி இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

“என்னப்பா நடக்குது நாட்டுக்குள்ள, சனம் அரசனை கலைக்குது நாட்டுக்குள்ள” என ஆரம்பிக்கும் பாடலை சிந்திக்க வைக்கவும் சிரிக்க வைக்கவும் வகையில் மதீசன் இந்த பாடலை வழங்கியுள்ளார்.

“இலங்கை அனுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை வரலாற்றில் மிக மோசமாக வர்ணிக்கப்படும் மன்னருமாகிய ஐந்தாம் மகிந்தன் என்பவர் எவ்வாறு சோழரிடம் நாட்டையும் ராஜ்யத்தையும் தாரை வார்த்தார் என்பதை வில்லுப்பாட்டுடன் இணைத்து கூறுகிறது இந்த பாடல். செவி வழி மூலமும் பாடப்புத்தகங்களிலும், ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து வரலாற்றில் புனையப்பட்ட உண்மைக்கதைகளை அடிப்படையாக்கி இப்பாடலின் கரு உருவாக்கப்பட்டுள்ளது” என பாடலாசிரியர் மதீசன் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply