கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் பல்லாயிர கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். காவல்துறையினரினால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் போராட்ட காரர்களினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளன.
முப்படையினர் மக்களுக்குள்ளும் கலந்துள்ள நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாள் உள்ள போர்த்துக்கீச மணிக்கூட்டு கோபுரத்துக்கு கீழே அமைந்துள்ள பாரிய கதவு மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்துள்ள போதும் தற்போது அதனை தகர்ப்பதற்கு மக்கள் முயற்ச்சித்து வருகின்றனர்.
காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகளும் தர்க்கப்பட்டுள்ளன. போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் முழுமையாக வந்து சேராத நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.