பதவி விலக தயார்; பெரும்பான்மையினை நிரூபியுங்கள் – ரணில்

பிரதமர் பதவியிலிருந்து விலகி அனைத்து கட்சி அரசாங்கத்துக்கு ஆட்சியினை வழங்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு அதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் நாட்டுக்கு எரிபொருட்கள் வருகின்றன. அத்தோடு உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அத்தோடு மக்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக மேலும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதவி விலக தயார்; பெரும்பான்மையினை நிரூபியுங்கள் - ரணில்

Social Share

Leave a Reply