முல்லைதீவில் வெடி கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்ட மக்கள்.

நேற்றைய மக்கள் போராட்ட வெற்றிக்கு முல்லைத்தீவு மக்கள் ஆதரவு தெரிவித்து வெடி கொழுத்தி கொண்டாடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட்ட மக்கள் போராட்டத்தின் வெற்றியால், ஜனாதிபதி மாளிகையினை விட்டு விரட்டியடிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை,புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மக்கள் வெடிகொழுத்தி ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடைபெற்ற போராட்டத்தின் எதிரெலியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கச ஜனாதிபதி மாளிகையினை விட்டு வெளியேறியுள்ளதுடன் நாட்டின் அரசியல் ஆட்டம் கண்டுள்ள நிலைக்கு கொண்டு சென்ற மக்கள் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்

மக்களின் போராட்டவெற்றிக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தண்ணீரூற்று நகர்பகுதியிலும் புதுக்குடியிருப்பு நகர் சந்தியிலும் வெடிகொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைதீவில் வெடி கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்ட மக்கள்.

Social Share

Leave a Reply