பங்குசந்தை திடீர் முன்னேற்றம்

இன்றைய(11.07) தினம் பங்கு சந்தை திடீர் ஏற்றத்தை காட்டியுள்ளது. 4.20 சதவீத ஏற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அனைத்து பங்கு சுட்டெண் 7080.69 புள்ளிகளோடு ஆரம்பித்த 7378.00 எனும் புள்ளியில் நிறைவடைந்தது.

இது ஒரு பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. கடந்த மாதம் 10 ஆம் திகதி 7900 ஆக காணப்பட்ட பங்குசந்தை அனைத்து பங்கு சுட்டெண் நிலையற்றதாக தொடர்ந்தது. படிப்படியாக வீழ்ச்சியடைந்து 7080.69 என கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ச்சி கண்ட நிலையில் இன்று இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி ஐந்தாம் திகதி இலங்கையின் அதிகூடிய அனைத்து பங்கு சுட்டெண் புள்ளியான 13000 ஐ தாண்டி சாதனை படைத்திருந்தது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதர வீழ்ச்சி காரணமாக மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள பாங்கு சந்தை பரிமாற்றம், 45 சதவீதத்துக்கும் மேலான வீழ்ச்சியினை 7 மாதங்களில் சந்தித்துள்ளது. இன்று காட்டியுள்ள முன்னேற்றம், கடந்த தினங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உருவாகியுள்ளதாக பங்குசந்தை விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் பொருளாதார மாற்றம் ஏற்படுமெனவும், முதலீடுகள் அதிகரிக்கும் நிலை உருவாகுமெனவும் பொருளாதார நிபுணர்கள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கது. தொடரும் நாட்களில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டாலே இந்த கருத்தும் உறுதியானதாக அமையும்.

பங்குசந்தை திடீர் முன்னேற்றம்

Social Share

Leave a Reply