புதிய அரசு தயாரானதும் அமைச்சரவை பதவி விலகும்

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதும் தற்போதைய அமைச்சரவை பொறுப்புகளை புதிய அரசாங்கத்துக்கு வழங்கும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. சகல அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். பதவி விலகல் கடிதங்களை கையளித்தவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

புதிய அரசாங்கத்திடம் பொறுப்புகளை வழங்கி வெளியேறுவதென கூட்டத்தில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு தயாரானதும் அமைச்சரவை பதவி விலகும்

Social Share

Leave a Reply