வெளிநாடு செல்ல முடியாமல் திரும்பினார் பசில்

வெளிநாடு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பயணத்தை தொடர முடியாமல் திரும்பியுள்ளார்.

விசேட பிரதிநிதிகளுக்கான சில்க் வழி என கூறப்படும் விமான நிலைய குடிவரவு, குடியகல்வு உள்நுழையும் பகுதிகியல் கடமையாற்றும் அதிகாரிகள் நள்ளிரவு முதல் கடமையிலிருத்து விலகியமையினால் பசில் ராஜபக்ஷ உள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பயணத்தை தொடர முடியாமல் அவர் திரும்பியதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

குடிவரவு, குடியகல்வு ஊழியர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் காணப்படுவதனால் தாம் பணியிலிருந்து விலகியதாக குடிவரவு, குடியகல்வு சங்க அதிகாரி K.A.A.S கணுகல தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முடியாமல் திரும்பினார் பசில்

Social Share

Leave a Reply