ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மற்றைய வெதுப்பக தயாரிப்புகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலையுயர்வுகள் அமுலுக்கு வரவுள்ளன. இந்த வருடத்தில் நான்காவது தடவையாக பாணின் விலை உயர்த்தப்படுகிறது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் டொலர் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக வெதுப்பக உற்பத்திகள் விலை உயர்த்தப்பட்டன.
