ஜனாதிபதி இன்று வெளிநாடு செல்ல முயற்சித்த போதும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்தாக AFP செய்தி சேவை செய்தியினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசேட பிரதிநிதிகளுக்கான சேவையிலிருந்து விலகியதன் காரணமாக கடவுச்சீட்டில் முத்திரை பதிக்க முடியாமல் போனதாகவும் அதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முதற் பெண்மணியும் மீண்டும் விமான நிலையத்தில் இருந்து திருப்பி சென்றதாக AFP கூறுகிறது.
விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ள AFP, விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் நேற்று இரவு ஜனாதிபதியும், அவரது பாரியரும் தங்கியிருந்து விமான நிலையத்துக்கு சென்றதாக தகவல் வெளியிட்டுள்ளது.
தான் பதவியிலிருக்கும் போதே வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாள் கைதாவதிலிருந்து தப்பித்து கொள்ள முடியுமென்ற நோக்கத்திலேயே ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் செல்லும் வழியூடாக செல்வதினையும் ஜனாதிபதி விரும்பவில்லை எனவும், அவ்வாறு சென்றால் மக்களை எதிர்கொள்ள வேண்டுமென்ற நிலை ஏற்படுமெனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
