வவுனியா அகதிகள் தமிழகத்தில் அபாய நிலையிலிருந்து மீட்பு

வவுனியா, பறையனாளங்குளம் பகுதியை சேர்ந்த குடுமத்தினர் அகதிகளாக சென்று தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த நிலையில் 6 பேரை தமிழக மரைன் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் அவர்கள் மீட்டகப்பட்டுள்ளனர். அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்று விசாரணை செய்யப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி இரவு இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒரு படகில் புறப்பட்டு நேற்று (11.07) காலை சுமார் 5 மணியளவில் தனுஷ்கோடி முதலாம் மணற் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து உள்ளனர் என தமிழக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மேலும் தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பல மணி நேரம் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த உடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் எங்களை போலீசார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர்” என தமிழகம் சென்றுள்ள குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா அகதிகள் தமிழகத்தில் அபாய நிலையிலிருந்து மீட்பு

Social Share

Leave a Reply