லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த வருடத்துக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் முதலாம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியோடு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

24 போட்டிகள் மொத்தமாக நடைபெறவுள்ளன. முதல் 7 நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் வீதம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் சுற்று போட்டிகள் மூன்று தினங்களில் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதன் பின்னரான தெரிவு காண் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியன மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவுள்ளன. ஓகஸ்ட் 21 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை கீழுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது

Social Share

Leave a Reply