ஜனாதிபதி மாளிகையினை சேதப்டுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க தெரிவித்துள்ளார்.
புராதன வரலாறு கொண்ட ஜனாதிபதி மாளிகையில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (12/07) ஜனாதிபதி மாளிகையின் சேத விபரங்களை தொல் பொருள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி முதல் போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையினை கைப்பற்றி வைத்துள்ளனர். தொல்பொருள் திணைக்களம் போராட்ட காரர்கள், மற்றும் பாதுக்காப்பு துறையினருடன் ஜனாதிபதி மாளிகையினை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பேராசிரியர் மானதுங்க தெரிவித்துள்ளார்.
