மஹிந்த, பசிலுக்கு தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் வழங்கியிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இன்று இவர்கள் மீதான தடையுத்தரவு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளையில், தடையுத்தரவை 28 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று அவர்களது வழக்கறிஞர்கள் மூலமாக இன்று வரை வெளிநாட்டுக்கு செல்ல மாட்டோம் என தெரிவித்திருந்தனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட மேலும் அறுவர் மீது வெளிநாடு செல்ல தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கடந்த 13 ஆம் திகதி ட்ரான்ஸ்பரன்சி இன்டெர்நெசனல் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கோடு, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரட்ன நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதர நெருக்கடி தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டுமென பிறிதொரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மஹிந்த, பசிலுக்கு தடை நீடிப்பு

Social Share

Leave a Reply