தொடரும் பாகிஸ்தான் ஆதிக்கம்.

(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(16.07) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மதியபோசனம் வரை மிக மோசமாக துடுப்பாடிய இலங்கை அணி 08 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நல்ல ஆரம்பத்தை பெற முடியாமால் போனமையினால், மதிய போசனத்துக்கு பின்னரும் தடுமாறும் நிலை ஏற்பட்டது. மதிய போசனம் ஆரம்பித்து குறுகிய நேரத்துக்குள் இரண்டு விக்கெட்களை இழந்த இலங்கை அணி ஓட்டங்களை பெற தடுமாறி வருகிறது. விக்கெட் வீழ்ந்தால் அடுத்தடுத்து விக்கெட் விழும் நிலை இலங்கை அணியின் மோசமான நிலைப்பாடாகும். டினேஷ் சந்திமால் தனித்து நின்று போராடி வருகிறார்.

நிதானமாக துடுப்பாடி வரும் டினேஷ் சந்திமாலே தற்போதைக்கு நம்பிக்கை. அவுஸ்திரேலிய அணியுடன் நல்ல இணைப்பாட்டம் புரிந்து இலங்கை அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்த சந்திமால் – ரமேஷ் மென்டிஸ் ஜோடி இந்தப் போட்டியிலும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட வேளையில், தேவையில்லாத துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக ரமேஷ் மென்டிஸ் ஆட்டமிழந்தார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி தேநீர் பான இடைவேளை வரை 07 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்று துடுப்பாடி வருகிறது.

பாகிஸ்தான் அணியின் நேர்த்தியான பந்துவீச்சு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்துள்ளது. குறிப்பாக ஷஹின் ஷா அப்ரிடியின் ஸ்விங் பந்துவீச்சு இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்துள்ளது. இந்த போட்டியில் மீள் வருகையினை ஏற்படுத்தியுள்ள யசீர் ஷா கடந்த காலங்களில் இலங்கை அணிக்கெதிராக மிகவும் சிறப்பாக பந்துவீசியுள்ளார் என்பது இலங்கை அணிக்கு சிக்கலை தரும் என நம்பப்படுகிறது.

சுழற்பந்துவீச்சாளரக்ளுக்கு சாதகம் தரும் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களை உருட்டி எடுத்து வருகின்றனர்.

துடுப்பாட்ட வீரர்களின் பிழையான துடுப்பாட்ட பிரயோகங்களும் இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளன.

மைதானத்தில் மழைக்கான அறிகுறிகள் காணப்பட்ட போதும் தற்போது தெளிவான வாநிலை காணப்படுகிறது. வெயிலுடனான வாநிலை மைதானத்தில் தென்படுகிறது.

முழுமையான ஸ்கோர் விபரம்.

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷட பெர்னாண்டோபிடி – ரிஷ்வான்ஹசன் அலி354950
2திமுத் கருணாரட்ணBowledஷஹீன் அப்ரிடி010700
3குசல் மென்டிஸ்பிடி – ரிஷ்வான்யாசிர் ஷா213530
4அஞ்சலோ மத்யூஸ்பிடி – நஸீம் ஷாயாசிர் ஷா01500
5தினேஷ் சந்திமல்  6810391
6தனஞ்சய டி சில்வாBowledஷஹீன் அப்ரிடி081310
7நிரோஷன் டிக்வெல்லபிடி –  சல்மான்ஷஹீன் அப்ரிடி040410
8ரமேஷ் மென்டிஸ்பிடி – ரிஷ்வான்நசீம் ஷா 114110
9பிரபாத் ஜயசூரியL.B.Wமொஹமட்  நவாஸ்030900
10மகேஷ் தீக்ஷண  06 2110
11       
 உதிரிகள்  03   
 ஓவர் 52விக்கெட் – 08மொத்தம்166   
        

 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1ஷஹீன் ஷா அப்ரிடி 11023803
2ஹசன் அலி08011501
3நசீம் ஷா 10004401
4யாசிர் ஷா17044802
5மொஹமட்  நவாஸ்06021801
தொடரும் பாகிஸ்தான் ஆதிக்கம்.

Social Share

Leave a Reply