எரிபொருளை வாகனங்களுக்கு பெறுவதற்கு இணையம் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் முறை இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று இதனை அறிமுகம் செய்து வைத்தார். தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து வழங்கியுள்ளது.
தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கத்தினூடாக பதிவு செய்து, வாகன அடிச்சட்ட இலக்கம் அடங்கலாக வாகனக விபரங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், QR குறியீடு வழங்கப்படும்.
பதிவு செய்யப்படும் வாகன இலத்தின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நடைபெறும் எனவும், வாரத்துக்கு இருமுறை எரிபொருள் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஓதுக்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அமுல் செய்யப்பட்டால் எரிபொருள் பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தை இல்லாமல் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தொழில் நுட்பம் அறிமுகம் செய்து சிறிது நேரத்திலேயே அதிக பாவனையாளர்கள் காரணமாக செயலிழந்துள்ளது. பதிவுகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைகளை பலரும் எதிர்கொள்கின்றனர்.
கீழுள்ள இணையத்தளத்தின் மூலமாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். (பதிவு இனையம் இங்கே உங்களுடன் பகிரப்பட்டுள்ளது. இது வலுசக்தி அமைச்சின் இணையத்தளம் ஆகும்)
