இன்று ஜனாதிபதி தெரிவுக்கான பாரளுமன்ற அமர்வு

முக்கியத்துவம் வாய்ந்த பாரளுமன்ற அமர்வு இன்று(19.07) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது புதிய ஜனாதிபதிக்கான தெரிவு நடைபெறவுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருத்து விலக்கியதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக டலஸ் அலகபெரும, ஆகியோர் தாங்கள் ஜனாதிபதி தெரிவில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக தொடர்ச்சியாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் அவர் சார்பில் உத்தியோகபூர்வ அவிப்புகள் வெளியாகவில்லை.

எவ்வாறு அமைந்தாலும் இன்று பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் தெரிவுகளே இறுதியானவை. உத்தியோகபூர்வமானவை. ஆகவே இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் முக்கியம் பெறுகின்றன.

இலங்கை மக்கள் மட்டுமின்றி, சர்வதேசமே இன்றைய பாராளுமன்ற அமர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்த ஜனாபதி தெரிவு ஏகமனதாக நடைபெறாமல், வாக்களிப்புக்கு சென்றால், வாக்களிப்பில் கூடுதல் வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார் என்பதே சட்டம். பாரளுமன்ற பெரும்பான்மையான 113 வாக்குகள் தேவையில்லை. தேர்தலில் பங்குபற்றியவர்களில் 50 சதவீத வாக்குகளை பெற்றால் நேரடியாக தெரிவு செய்யப்படுவார். இருவருக்கு மேல் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார். ஆனாலும் இரண்டாம் தெரிவு வாக்குகள் ஆதிக்கம் செலுத்தும் எனவும் கூறப்படுகிறது.

தேர்தலின்றி தெரிவுகளை நடாத்த முக்கிய கட்சிகள் முடிவெடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாரளுமன்றத்தில் வாக்களிப்பு கலாச்சாரம் இல்லாமல் செய்யப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதன் காரணமாகவோ தாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார். வாக்களிப்பில் அவர்கள் பங்கெடுக்கும் சாத்தியம் இருப்பது போன்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

நேற்று முதல் பாராளுமன்ற சுற்று வட்டார பகுதிகள் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள் மூடப்பட்டுள்ளன. பாரளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று பாராளுமன்றத்துக்கு முன்னாள் போராட்டம் நடாத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் தீர்மானம் மிக்க நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்க போகும் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கவுள்ளன.

இன்று ஜனாதிபதி தெரிவுக்கான பாரளுமன்ற அமர்வு

Social Share

Leave a Reply