(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று போட்டி ஆரம்பித்து சொற்ப வேளையிலேயே இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவடைந்தது. இலங்கை அணியின் இறுதி விக்கட் வீழ்த்தப்பட்டது. டினேஷ் சந்திமால் 94 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமால் திரும்பினார்.
இலங்கை அணி 337 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததனை தொடர்ந்து, 342 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நான்காம் இன்னிங்சில் துடுப்பாடுவது மிகவும் கடினம். இலங்கை அணி 268 ஓட்டங்களை துரதியடித்தமையே சாதனையாக காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் பலமானது. குறைத்து மத்திப்பிட முடியாது. போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையின் இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர். தனது நான்காவது போட்டியில் முதலாவது 5 விக்க்கெட் பெறுதியினை பெற்றுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷட பெர்னாண்டோ | பிடி – பாபர் அசாம் | யசிர் ஷா | 64 | 125 | 6 | 1 |
| 2 | திமுத் கருணாரட்ண | L.B.W | மொஹமட் நவாஸ் | 16 | 29 | 2 | 0 |
| 3 | கசுன் ரஜித | L.B.W | மொஹமட் நவாஸ் | 07 | 12 | 1 | 0 |
| 4 | குசல் மென்டிஸ் | Boweld | யசிர் ஷா | 76 | 126 | 9 | 0 |
| 5 | அஞ்சலோ மத்யூஸ் | பிடி – பாபர் அசாம் | மொஹமட் நவாஸ் | 09 | 25 | 1 | 0 |
| 6 | தினேஷ் சந்திமல் | 86 | 121 | 5 | 2 | ||
| 7 | தனஞ்சய டி சில்வா | Boweld | யசிர் ஷா | 20 | 20 | 2 | 1 |
| 8 | நிரோஷன் டிக்வெல்ல | Boweld | மொஹமட் நவாஸ் | 12 | 11 | 2 | 0 |
| 9 | ரமேஷ் மென்டிஸ் | Boweld | மொஹமட் நவாஸ் | 22 | 32 | 2 | 0 |
| 10 | மகேஷ் தீக்ஷண | பிடி – மொஹமட் ரிஸ்வான் | ஹசன் அலி | 11 | 57 | 0 | 0 |
| 11 | பிரபாத் ஜயசூரிய | 04 | 19 | 1 | 0 | ||
| உதிரிகள் | 02 | ||||||
| ஓவர் 96 | விக்கெட் – 09 | மொத்தம் | 329 | ||||
| முன்னிலை | 333 |
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஷஹீன் ஷா அப்ரிடி | 04 | 01 | 16 | 00 |
| 2 | மொஹமட் நவாஸ் | 28 | 02 | 88 | 05 |
| 3 | அகா சல்மான் | 16 | 01 | 53 | 00 |
| 4 | யசிர் ஷா | 29 | 02 | 122 | 03 |
| 5 | ஹசன் அலி | 10 | 03 | 15 | 01 |
| 6 | பாபர் அசாம் | 01 | 00 | 09 | 00 |
| 7 | நசீம் ஷா | 05 | 00 | 20 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 13 | 47 | 2 | 0 |
| இமாம்-உல்-ஹக் | L.B.W | கசுன் ரஜித | 02 | 16 | 0 | 0 |
| அசார் அலி | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 03 | 38 | 0 | 0 |
| பாபர் அசாம் | L.B.W | மகேஷ் தீக்ஷண | 119 | 244 | 11 | 2 |
| மொஹமட் ரிஸ்வான் | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 19 | 35 | 3 | 0 |
| அகா சல்மான் | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 05 | 15 | 1 | 0 |
| மொஹமட் நவாஸ் | பிடி – சந்திமால் | பிரபாத் ஜயசூரிய | 05 | 18 | 0 | 0 |
| ஷஹீன் ஷா அப்ரிடி | L.B.W | பிரபாத் ஜயசூரிய | 00 | 01 | 0 | 0 |
| யசிர் ஷா | பிடி – தனஞ்சய | மகேஷ் தீக்ஷண | 12 | 32 | 0 | 0 |
| ஹசன் அலி | பிடி – சந்திமால் | ரமேஷ் மென்டிஸ் | 17 | 21 | 0 | 2 |
| நசீம் ஷா | 05 | 42 | 0 | 0 | ||
| 12 | ||||||
| ஓவர் 90.5 | விக்கெட் – 10 | மொத்தம் | 218 | |||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | கசுன் ரஜித | 11 | 02 | 42 | 01 |
| 2 | மகேஷ் தீக்ஷண | 25.5 | 06 | 68 | 02 |
| 3 | பிரபாத் ஜயசூரிய | 39 | 10 | 82 | 05 |
| 4 | ரமேஷ் மென்டிஸ் | 13 | 02 | 18 | 02 |
| 5 | தனஞ்சய டி சில்வா | 02 | 00 | 02 | 00 |
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் இன்று. இன்றைய நாள் போட்டி 9.57 இற்கு ஆரம்பமாகவுள்ளது. 91 ஓவர்கள் மொத்தமாக இன்றைய நாளில் பந்துவீசப்படவுள்ளன.
இலங்கை அணி இன்று வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. பெறப்பட்டுள்ள முன்னிலை ஓட்டங்களான 333 ஓட்டங்கள் வெற்றி பெறக்கூடிய இலக்கு. இறுதி துடுப்பாட்ட ஜோடி மைதானத்தில் காணப்படுகிறது. 86 ஓட்டங்களோடு காணப்படும் தினேஷ் சந்திமால் இன்று சதத்தினை பூர்த்தி செய்தால் மேலும் ஓட்டங்கள் கிடைப்பதோடு இலங்கைக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் பலமானது. குறைத்து மத்திப்பிட முடியாது. போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். வாநிலை சிறப்பாக காணப்படுகின்றது. மழைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. காலை வேளையிலேயே கடும் வெயில் தென்படுகிறது.
தினேஷ் சந்திமால் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பாக துடுப்பாடி வருகிறார். அவுஸ்திரேலியா தொடரின் இரணடாவது போட்டியில் அபாரமாக இறுதி நேர துடுப்பாட்ட வீரர்களோடு கன்னி இரட்டை சத்தை பெற்றுக்கொண்டார். கடந்த இன்னிங்சில் இறுதி நேர துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து 76 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்த இன்னிங்சில் சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இலங்கையின் இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர். தனது நான்காவது போட்டியில் முதலாவது 5 விக்க்கெட் பெறுதியினை பெற்றுள்ளார்.
